ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்

காஸ்பர் ரூட்டை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருந்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

துரின்,

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் 'ஏ.டி.பி. பைனல்ஸ்' எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி கடந்த 20 ஆம் தேதி முடிவடைந்தது.

குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்- காஸ்பர் ரூட் ஆகியோர் சாம்பியன் பட்டத்துக்கான பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதன் மூலம் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை அதிக முறை வென்ற முன்னாள் வீரர் ரோஜர் பெடரரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை நோவக் ஜோகோவிச் சமன் செய்துள்ளார். இருவரும் தலா 6 முறை ஏ.டி.பி. பைனல்ஸ் பட்டத்தை வென்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com