பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான சிட்சிபாஸ் (கிரீஸ்), ஸ்பெயினின் ராபர்டோ கார்பலேஸ் பேனா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சிட்சிபாஸ், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் சிட்சிபாஸ் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ராபர்டோ கார்பலேஸ் பேனாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டத்தில் சிட்சிபாஸ், சிலியின் அலெஜான்ட்ரோ டேபிலோ உடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com