பாரிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய காஸ்பர் ரூட், டாமி பால்

நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஜெர்மனியின் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரப்பை எதிர்கொண்டார்.
பாரிஸ் ஓபன் டென்னிஸ்
Published on: 

பாரிஸ்,

பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டங்களில் நார்வேயின் காஸ்பர் ரூட், அமெரிக்காவின் டாமி பால் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

காஸ்பர் ரூட் அபார வெற்றி

3-வது சுற்று ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஜெர்மனியின் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரப்பை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ரூட், இரு செட்களிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

இதனால் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

டாமி பால் வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டாமி பால், பிரான்சின் குயிண்டென் ஹாலிசை எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் கடுமையாகப் போராடினர். இறுதியில் டைபிரேக்கரில் டாமி பால் 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

X