டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரபேல் நடால்

டேவிஸ் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரபேல் நடால் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மேட்ரிட்,

டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். டேவிஸ் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டேவிஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் தோல்வி கண்டது. இதில் ஒற்றையர் பிரிவில் தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய ரபேல் நடாலும் தோல்வியை தழுவினார். 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இதையடுத்து ரபேல் நடால் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். என் வாழ்வின் முதல் போட்டியிலும் தோல்வி கண்டேன். தற்போது கடைசி போட்டியிலும் தோல்வி கண்டுள்ளேன். என் விளையாட்டு வாழ்வின் வட்டம் பூரணமடைந்திருக்கிறது என நடால் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகள் சர்வதேச டென்னிசில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ரபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.

மேலும், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நடால் படைத்துள்ளார். 38 வயதான ரபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் சேர்த்து மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com