வாழ்த்து கூறிய விராட் கோலிக்கு பெடரர் அளித்த பதில் என்ன..?

ரோஜர் பெடரர் ஓய்வு முடிவு அறிவித்ததற்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பெர்ன்,

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்தார்.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவருக்கு பல்வேறு நபர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏடிபி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரோஜர் பெடரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் டென்னிஸ் விளையாடுவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின்போது கிடைத்தது. டென்னிஸ் விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த வீரர். உங்களுடைய வாழ்வில் அடுத்த பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விராட் கோலியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்ட ரோஜர் பெடரர், நன்றி விராட் கோலி.. விரைவில் இந்தியா வருவேன் எனத் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு டென்னிஸ் வீரர் பெடரர் நன்றி தெரிவித்தது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com