

நிங்போ,
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு எலினா ரைபகினா முன்னேறியுள்ளார்.
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனையான ரைபகினா, டயானா ஷ்னைடரை எதிர்கொண்டார். முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய ரைபகினா, 6-3 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் ஷ்னைடர் கடும் சவால் அளித்தார். இருப்பினும், சிறப்பாக செயல்பட்ட ரைபகினா, அந்த செட்டையும் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில் கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ், செக் குடியரசின் மேரி பௌஸ்கோவாவை 6-3, 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதையடுத்து, நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரைபகினா, லேலா பெர்னாண்டஸை எதிர்கொள்கிறார்.