ஷாங்காய் மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றிலேயே வெளியேறிய ஜோகோவிச்

ஜோகோவிச்சின் இந்த தோல்வி டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோவக் ஜோகோவிச்
Published on: 

ஷாங்காய்,

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

ஹர்காக்ஸிடம் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஹர்காக்ஸ், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இந்த வெற்றியின் மூலம் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அதே நேரத்தில், முன்னணி வீரரான ஜோகோவிச் 2-வது சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேறினார். ஜோகோவிச்சின் இந்த தோல்வி டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com