

புதுடெல்லி,
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிசில் ஆண்கள் ஒற் றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் செருண்டோலோவை வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் அலியாசிம் (கனடா), டேனில் மெட்விடேவ் (ரஷியா). டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஆர்துர் பில்ஸ் (பிரான்ஸ்), டாமி பால் (அமெரிக்கா), சிட்சிபாஸ் (கிரீஸ்), கேஸ்பர் ரூட் (நார்வே), ஜிரி லெஹெக்கா (செக்குடியரசு) ஆகியோரும் வெற்றியை பெற்றனர்.