ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அல்காரஸ், சின்னெர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), சீனாவின் ஷாங் ஜூஜெங் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஷாங் ஜூஜெங்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), ஜப்பானின் டாரோ டேனியல் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜன்னிக் சின்னெர் 6-1, 6-4 2 என்ற நேர் செட் கணக்கில் டாரோ டேனியலை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com