ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 64) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா), செக் குடியரசின் ஜக்குப் மென்ஷிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (9-7) என்ற புள்ளிக்கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவ் கைப்பற்றினார். இதையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜக்குப் மென்ஷிக் ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-4, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 6-7 (7-9), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி ஜக்குப் மென்ஷிக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட ஆண்ட்ரே ரூப்லெவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com