ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: போபண்ணா இணை அதிர்ச்சி தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - குரோசியாவின் இவான் டோடிக் இணை, குரோசியாவின் நிகோலோ மெடிக்-நெதர்லாந்தின் வெஸ்லி ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் போபண்ணா ஜோடி 6-7 (5-7) என போராடி தோற்றது. இதையடுத்து 2வது செட்டில் அபாரமாக செயல்பட்ட போபண்ணா ஜோடி 6-2 என எளிதில் கைப்பற்றியது.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இரு ஜோடியும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் இந்த செட்டில் போபண்ணா ஜோடி 12-14 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com