image courtesy: AFP
image courtesy: AFP

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; ஹோல்கர் ரூனே 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 64) ஆட்டம் ஒன்றில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே - இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ரூனே, போட்டியின் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி ஹோல்கர் ரூனே 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 3வது சுற்று ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா உடன் மோத உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com