ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், செக் குடியரசின் ஜக்குப் மென்ஷிக் உடன் மோத உள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் ரோமன் சபியுலின் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் ரோமன் சபியுலினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், செக் குடியரசின் ஜக்குப் மென்ஷிக் உடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com