ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோத உள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பெல்ஜியத்தின் டேவிட் கோபின் உடன் மோதினார்.

இந்தப்போட்டியில் ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டேவிட் கோபினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோத உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com