

ஷாங்காய்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 20 வயது ஸ்பெயின் வீரர் ரபெல் ஜோடர் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான டேனில் மெட்விடேவை (ரஷியா) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.
இதன் மூலம் இந்த போட்டி தொடரில் குறைந்த வயதில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரபெல் ஜோடர்-போகினா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
சீனாவில் நடந்து வரும் வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இங்கிலாந்து வீராங்கனை சோனாய் கார்டல் 7-6 (11-9), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) சாய்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.