சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனிடம் வீழ்ந்தார் சிந்து

சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் பாசெல் நகரில் நடந்தது.
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனிடம் வீழ்ந்தார் சிந்து
Published on

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினும் கோதாவில் குதித்தனர். இடக்கை ஆட்டக்காரரான கரோலினா மரினின் சாதுர்யமான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிந்து 12-21, 5-21 என்ற நேர் செட்டில் வெறும் 35 நிமிடங்களில் தோற்று தங்கப்பதக்கத்தை நழுவ விட்டார். ஓராண்டுக்கு மேலாக சிந்து எந்த பட்டமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com