

ஒசாகா,
ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செக் குடியரசு வீராங்கனை கத்ரீனா சினியாகோவா வென்றார்.
ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கத்ரீனா சினியாகோவா, அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகரை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் 2-1 என முன்னிலை பெற்ற சினியாகோவா, அதன் பிறகு தொடர்ந்து 10 கேம்களை வென்று ஆதிக்கம் செலுத்தினார். இதனால் க்ரூகரால் அவருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில் 6-1, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சினியாகோவா, ஜப்பான் மகளிர் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் சினியாகோவா தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் 6-வது டபிள்யூ.டி.ஏ. ஒற்றையர் பிரிவு பட்டத்தைக் கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில் சிறந்து விளங்கும் அவர், தற்போது ஒற்றையர் பிரிவிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.