ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்; நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நுனோ போர்ஹெஸ்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரபேல் நடால் - நுனோ போர்ஹெஸ் மோதினர்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

ஸ்வீடன்,

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், போர்ச்சுகலின் நுனோ போர்ஹெஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நுனோ போர்ஹெஸ் 6-3, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ரபேல் நடாலுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com