ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்; ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

ஸ்வீடன்,

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-7 (2-7) என்ற செட் கணக்கில் இழந்த ரபேல் நடால், ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 7-5, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில் நடால் 6-7 (2-7), 7-5, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் அர்ஜென்டினாவின் மரியானோ நவோனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நடால் குரோஷியாவின் டுஜே அஜ்டுகோவிக் உடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com