ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரபேல் நடால்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

ஸ்வீடன்,

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், குரோஷியாவின் டுஜே அஜ்டுகோவிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை டுஜே அஜ்டுகோவிக் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து அபாரமாக செயல்பட்ட நடால் தனது அனுபவத்தை பயன்படுத்தி ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில் நடால் 4-6, 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் குரோஷியாவின் டுஜே அஜ்டுகோவிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com