சீன ஓபன் டென்னிஸ்: போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
சீன ஓபன் டென்னிஸ்: போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on: 

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் தொடரில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சீன ஓபன் டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் போலாந்தின் முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் மறும் அமெரிக்காவின் இளம் வீராங்கனை இவா ஜோவிக்கை எதிர்கொண்டார்.

காலிறுதிக்கு முன்னேற்றம்

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இவா ஜோவிக்கை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் சீன ஓபன் டென்னிஸ் காலிறுதி சுற்றுக்கு இகா ஸ்வியாடெக் முன்னேறினார். அவர் காலிறுதியில் கோகோ காப் அல்லது எலிஸ் மெர்டென்சை எதிர்கொள்ள உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com