ஜெனீவா ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அரையிறுதியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், இத்தாலியின் பிளாவியோ கோபோலியுடன் மோதினார்.
ஜெனீவா ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

சுவிட்சர்லாந்து,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின்  அரையிறுதியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், இத்தாலியின் பிளாவியோ கோபோலியுடன் மோதினார்.

இதில் கேஸ்பர் ரூட் 1-6 என முதல் சுற்றை இழந்தார். தொடர்ந்து நடைபெற்ற சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்தி, சிறப்பாக விளையாடிய கேஸ்பர் ரூட் 6-1, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.இறுதிப்போட்டியில் கேஸ்பர் ரூட் , செக் வீரர் தாமஸை எதிர்கொள்ள உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com