டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி

டென்னிஸ் சாம்பியன்ஷிப் லீக் சுற்று முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , பென் ஷெல்டன், கார்லஸ் அல்காரஸ், டேனில் மெட் விடேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.
டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி
Published on: 

டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரைஇறுதியில் கார்லஸ் அல்காரஸ், பென் ஷெல்டனை வென்றார்.

துரின்,

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென் னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. வீரர்கள் ஜான் மெக்கன்ரோ, இவான் லென்டில் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதினர். லீக் சுற்று முடிவில் 'நம்பர் ஒன்' வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ரஷிய வீரர் டேனில் மெட் விடேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், முன்னாள் 'நம் பர் ஒன்' வீரருமான கார்லஸ் அல்காரஸ், தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பென் ஷெல்ட னுடன் மோதினார். 1 மணி 59 நிமிடம் நடந்த ஆட்டத்தில் அல்காரஸ் சரிவில் இருந்து மீண்டு 3-6, 6-3, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X