டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச், கீஸ் முன்னேற்றம்

இதில் இந்திய வீரர்களான போபண்ணா மற்றும் சுமித் நாகல் சறுக்கலை சந்தித்துள்ளனர்.
டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச், கீஸ் முன்னேற்றம்
Published on

புதுடெல்லி,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு வீரர் மற்றும் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான இத்தாலியின் ஜானிக் சினெர் முதலிடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்திலும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

முன்னாள் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒரு இடம் உயர்ந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் சுமித் நாகல் 15 இடங்கள் சறுக்கி 106-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர் ரோகன் போண்ணா 5 இடங்கள் சரிந்து 21-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பெலாரசின் அரினா சபலென்கா முதலிடத்திலும், போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-வது இடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com