அனல் பறந்த ஜப்பான் ஓபன் இறுதிப்போட்டி... லேலா பெர்னாண்டஸை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்ற டயானா

டயானா 6-4 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.
 டயானா ஷ்னைடர்
Published on: 

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், கனடாவின் லேலா பெர்னாண்டஸை வீழ்த்தி ரஷிய வீராங்கனை டயானா ஷ்னைடர் சாம்பியன் பட்டம் வென்றார்.

விறுவிறுப்பான இறுதிப்போட்டி

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் டயானா ஷ்னைடர், லேலா பெர்னாண்டஸை எதிர்கொண்டார். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஷ்னைடர் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இதற்குப் பதிலடி கொடுத்த பெர்னாண்டஸ், இரண்டாவது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்று ஆட்டத்தை சமன் செய்தார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் கடுமையாகப் போராடினர். இதில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஷ்னைடர் 6-2 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.

6-வது பட்டம்

2 மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில், 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற டயானா ஷ்னைடர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

22 வயதான ஷ்னைடருக்கு இது 6-வது டபிள்யூ.டி.ஏ ஒற்றையர் பட்டமாகும். மேலும், 2026-ம் ஆண்டில் அவர் வென்ற முதல் பட்டம் இதுவாகும்.

X