ஒரே ஆண்டில் இரண்டு மாஸ்டர்ஸ் பட்டம்... வரலாற்றுச் சாதனை படைத்த ஜானிக் சினெர்

இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் ஆகிய இரு முக்கிய தொடர்களையும் ஒரே ஆண்டில் வென்று ‘சன்சைன் டபுள்' சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒரே ஆண்டில் இரண்டு மாஸ்டர்ஸ் பட்டம்... வரலாற்றுச் சாதனை படைத்த ஜானிக் சினெர்
Published on

மியாமி,

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் 2026 டென்னிஸ் தொடரில் இத்தாலியின் முன்னணி வீரர் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஜானிக் சினெர் , செக் குடியரசை சேர்ந்த ஜிரி லெஹெக்காவை 6-4, 6-4 என்ற நேர்செட்டில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். மழை காரணமாக போட்டி தொடக்கம் தாமதமானாலும், 1 மணி 33 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில் சினெர் ஆதிக்கம் செலுத்தினார்.

Also Read
மியாமி ஓபன் டென்னிஸ்: இத்தாலி ஜோடி சாம்பியன்
ஒரே ஆண்டில் இரண்டு மாஸ்டர்ஸ் பட்டம்... வரலாற்றுச் சாதனை படைத்த ஜானிக் சினெர்

இந்த வெற்றியின் மூலம் ஜானிக் சினெர், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் ஆகிய இரு முக்கிய தொடர்களையும் ஒரே ஆண்டில் வென்று ‘சன்சைன் டபுள்'’ சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேலும், உலக தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறி, முதலிடத்தில் உள்ள கார்லோஸ் அல்காரஸை நெருங்கியுள்ளார். அதோடு, நோவக் ஜோகோவிச் 10 ஆண்டுகளாக வைத்திருந்த மாஸ்டர்ஸ் 1000 தொடரில் தொடர்ந்து அதிக செட்களை வென்ற சாதனையையும் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com