அமெரிக்க ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், 6 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி
Published on

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. அமெரிக்க ஓபன் மகளிர் காலிறுதி சுற்று இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 9-ஆவது முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். செரீனா வில்லியம்ஸ் தனது அரையிறுதி சுற்றில் லாத்வியா நாட்டு வீராங்கனை அனாஸ்தாஸ்திஜா செவாஸ்தோவாவை எதிர்கொள்கிறார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com