அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது
Published on

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில்,கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்),  இத்தாலியின் லூசியானா டார்டெரியுடன் மோதினார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார் . அல்காரஸ் இந்த ஆட்டத்தின் போது வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு மைதானத்தில் சிகிச்சை எடுத்தபடி தொடர்ந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com