அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காஸ்பர் ரூட் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காஸ்பர் ரூட் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காஸ்பர் ரூட் (நார்வே) - செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா ) உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய காஸ்பர் ரூட் 6-1,6-2, 7(7)-6(5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பெல்ஜியம் வீரர் ரபேல் காலிகனை, காஸ்பர் ரூட் எதிர்கொள்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com