அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா 2-வது சுற்றுக்கு தகுதி

பெகுலா முதல் சுற்றில் மாயர் ஷெரிப் உடன் மோதினார்.
image courtesy:twitter/@usopen
image courtesy:twitter/@usopen
Published on

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, மாயர் ஷெரிப் (எகிப்து) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட பெகுலா 6-0 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் 2-வது சுற்றில் அன்னா பிளிங்கோவா உடன் மோத உள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com