அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், ரூப்லெவ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மெட்விடேவ், ரூப்லெவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
டேனில் மெட்விடேவ் (image courtesy: ATP Tour twitter via ANI)
டேனில் மெட்விடேவ் (image courtesy: ATP Tour twitter via ANI)
Published on

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவைச் சேர்ந்த 3-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ், அர்ஜென்டினா வீரர் செபாஸ்டினுடன் மோதினார். இந்த போட்டியில் மெட்விடேவ் 6-2, 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் செபாஸ்டினை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், பிரான்சு வீரர் ஆர்தருடன் மோதினார். இந்த போட்டியில் ரூப்லெவ் 3-6, 6-3, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஆர்தரை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com