அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை சபலென்கா காலிறுதிக்கு தகுதி

சபலென்கா 4-வது சுற்றில் கிறிஸ்டினா புக்ஸா உடன் மோதினார்.
image courtesy:twitter/@usopen
image courtesy:twitter/@usopen
Published on

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்), கிறிஸ்டினா புக்ஸா (ஸ்பெயின்) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-1 மற்றும் 6-4  என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் காலிறுதியில் மார்கெட்டா வோண்ட்ரூசோவா உடன் மோத உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com