அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, கார்பெல்லாஸ் பானா (ஸ்பெயின்) - பெடெரிகோ கோரியா (அர்ஜென்டினா) ஜோடியுடன் மோதியது.

இதில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் கார்பெல்லாஸ் பானா - பெடெரிகோ கோரியா இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com