அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

3-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் கமிலா ரஹிமோவாவை எதிர்கொள்கிறார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

வாஷிங்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூ யார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான, 'நம்பர் ஒன்' நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்). தகுதி நிலை வீராங்கனையான போலினா லாட்சென்கோவு டன் (ரஷியா) மோதினார். இதில் அனுபவம் வாய்ந்த சபலென்கா 6-1, 6-1 என்ற நேர் செட் டில் லாட்சென்கோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். சபலென்கா 3-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் கமிலா ரஹிமோவாவை எதிர்கொள்கிறார்.

விம்பிள்டன் சாம்பியனான லிண்டா நோஸ்கோவா (செக்குடியரசு), எம்மா நவரோ, இவா ஜோவிச், டெய்லர் டவுன்சென்ட் (3 பேரும் அமெரிக்கா). பாலா படோசா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்). லேலா பெர்னாண்டஸ் (கனடா) உள்ளிட்டோரும் தங்க ளது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com