5 மணி நேரம் 15 நிமிடங்கள் போராடி அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்... விம்பிள்டனில் புதிய சாதனை

நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச்
Published on

லண்டன்,

லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் போராடி வெற்றி

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமேவை ஜோகோவிச் எதிர்கொண்டார். 5 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் 7-6 (10), 3-6, 6-3, 6-7 (4), 7-6 (10-4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்றார்.

புதிய சாதனை

இந்த போட்டி விம்பிள்டன் வரலாற்றிலேயே ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மிக நீண்ட நேரம் நடைபெற்ற ஆட்டம் என்ற புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com