விம்பிள்டன் டென்னிஸ் - சாம்பியன்கள் அனைவரும் அவுட்... மகளிர் பிரிவில் கோப்பையை தூக்கப்போகும் புதிய முகம்

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கரோலினா முச்சோவா முன்னாள் சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவாவை எதிர்கொண்டார்.
விம்பிள்டன் டென்னிஸ்
Published on

லண்டன்,

இந்த முறை விம்பிள்டன் மகளிர் பிரிவில் புதியவர் ஒருவர் மகுடம் சூடுவது உறுதியாகி விட்டது.

கரோலினா முச்சோவா-பார்போரா கிரெஜ்சிகோவா

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக்குடியரசின் கரோலினா முச்சோவா முன்னாள் சாம்பியனும் சக நாட்டவருமான பார்போரா கிரெஜ்சிகோவாவை எதிர்கொண்டார்.

கால்இறுதி

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கரோலினா முச்சோவா 7-5, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் பார்போரா கிரெஜ்சிகோவாவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.

புதிய முகம்

கிரெஜ்சிகோவாவின் வெளியேற்றத்தின் மூலம் இந்த முறை விம்பிள்டன் மகளிர் பிரிவில் புதியவர் ஒருவர் மகுடம் சூடுவது உறுதியாகி விட்டது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா சரிவில் இருந்து மீண்டு 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான இவா ஜோவிச்சை சாய்த்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com