விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், எஸ்டேனியாவின் மார்க் லஜால் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்லஸ் அல்காரஸ் 7-6 (7-3), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் மார்க் லஜாலை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com