விம்பிள்டன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரான்சின் உகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய அல்காரஸ், 3வது செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 4வது செட்டில் அபாரமாக செயல்பட்ட அல்காரஸ் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்சின் உகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com