விம்பிள்டன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த அல்காரஸ், ஆட்டத்தின் அடுத்த செட்களை 6-4, 6-2, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் கார்லஸ் அல்காரஸ் 5-7, 6-4, 6-2, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

வரும் 12ம் தேதி நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் உடன் மோத உள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com