விம்பிள்டன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட், கிரிகோர் டிமிட்ரோவ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கேஸ்பர் ரூட், கிரிகோர் டிமிட்ரோவ் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஸ்பர் ரூட் 7-6 (7-2), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்டை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், செர்பியாவின் டுசான் லாஜோவிக் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய டிமிட்ரொவ் 6-3, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் செர்பியாவின் டுசான் லாஜோவிக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com