விம்பிள்டன் டென்னிஸ்: டோனா வெக்கிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷியாவின் டோனா வெக்கிச், நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனா வெக்கிச் 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நியூசிலாந்தின் லுலு சன்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com