விம்பிள்டன் டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
 Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட டிமிட்ரோவ் 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் கெயில் மான்பில்ஸை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com