விம்பிள்டன் டென்னிஸ்; பிளிஸ்கோவாவை வீழ்த்தினார் இகா ஸ்வியாடெக்

பிளிஸ்கோவாவை 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ்; பிளிஸ்கோவாவை வீழ்த்தினார் இகா ஸ்வியாடெக்
Published on

லண்டன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான போட்டி ஒன்றில், 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான இகா ஸ்வியாடெக் மற்றும் கரோலினா பிளிஸ்கோவா விளையாடினர்.

இந்த போட்டியில், கரோலினா பிளிஸ்கோவாவை 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். பிளிஸ்கோவாவை ஒரு செட் கூட எடுக்க விடாமல் அவரை திணற செய்து வெற்றியை பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com