விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீரர்

காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
Image : AFP 
Image : AFP 
Published on

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் முசெட்டி 3-6, 7-6 (7-5), 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் முசெட்டி, ஜோகோவிச்சுடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com