விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ஜன்னிக் சின்னர் தோல்வி

ஜன்னிக் சின்னரை வீழ்த்தி மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் மற்றும் 4வது செட்டை 7-6 (9-7), 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னரும், 2வது மற்றும் 3வது செட்டை 6-4, 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் மெத்வதேவும் கைப்பற்றினர்.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது செட் ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட மெத்வதேவ் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னரை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com