விம்பிள்டன் டென்னிஸ்; காயம் காரணமாக விலகிய கலின்ஸ்காயா..காலிறுதிக்கு முன்னேறிய ரைபகினா

காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் ரைபகினா 3-0 என முன்னிலையில் இருந்த போது அன்னா கலின்ஸ்காயா காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக கஜகஸ்தானின் எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேறினார். வரும் 10ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com