விம்பிள்டன் டென்னிஸ்: முசோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

செக் குடியரசின் கரோலினா முசோவா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: முசோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய முசோவா 7-6 (7-4), 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் கரோலினா முசோவா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com