விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப், பிரிட்டனின் சோனாய் கர்தலை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகோ காப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டனின் சோனாய் கர்தலை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர்கொள்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com