விம்பிள்டன் டென்னிஸ் தொடர்; டாமி பால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
 Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டாமி பால், கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com