விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஜானிக் சின்னர் ,அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜானிக் சின்னர் (இத்தாலி),அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சின்னர் 7(7)-6(2), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச் , சின்னர் ஆகியோர் மோதுகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com